2014-03-14 16:59:38

இந்தியாவில் 2.5 கோடி டன் உணவுப்பொருள் உற்பத்தி இலக்கு


மார்ச்,14,2014. இந்தியாவில் 12வது ஐந்தாண்டுத் திட்ட காலத்தில் 2 கோடியே 50 இலட்சம் டன் உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று மத்திய திட்டக்குழு உறுப்பினர் கே.கஸ்தூரிரங்கன் தெரிவித்தார்.
வேளாண் அறிவியலாளர் "நார்மன் போர்லாக்' நூற்றாண்டு விழாவையொட்டி, சென்னை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற வேளாண்மை குறித்த கருத்தரங்கத்தின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது இதனை அறிவித்தார் கஸ்தூரிரங்கன்.
கடந்த 60 ஆண்டுகளில் இந்தியாவின் வேளாண்மை வளர்ச்சி அடைந்துள்ளது எனவும், இந்தியாவில் பல கோடிப் பேருக்கு உணவு அளிப்பது தவிர, தொழிற்சாலைகளுக்கான மூலப்பொருள்களையும் வேளாண்மை வழங்குகிறது எனவும் கஸ்தூரிரங்கன் கூறினார்.
12வது ஐந்தாண்டுத் திட்டத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ள 2 கோடியே 50 இலட்சம் டன் உணவுப் பொருள்களில், 1 கோடி டன் அரிசி, 80 இலட்சம் டன் கோதுமை, 40 இலட்சம் டன் பருப்பு வகைகள், 30 இலட்சம் டன் சிறுதானியங்கள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றும் கஸ்தூரிரங்கன் கூறினார்.
வேளாண்மை குறித்த இக்கருத்தரங்கம் 15ம் தேதி நிறைவடைகிறது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.