2014-03-12 16:02:33

தென்கொரியாவில் "ஒரு உணவுக்கு 100 Won" பிறரன்பு முயற்சி


மார்ச்,12,2014. மங்கோலியாவில் உள்ள வறியோருக்கு உணவு கொடுக்கவும், தென்கொரியாவில் உள்ள ஏழை மாணவருக்கு கல்வி உதவிகள் செய்யவும் தென்கொரியாவின் Daejeon மறைமாவட்டம் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
2007ம் ஆண்டு தென் கொரிய ஆயர்கள் முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை 'அத்லிமினா' கூட்டத்தில் சந்தித்ததையும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், 'இறைவன் அன்பாக இருக்கிறார்' (Deus Caritas Est) என்ற சுற்று மடலை வெளியிட்டதையும் தொடர்ந்து, Daejeon மறைமாவட்டம், "ஒரு உணவுக்கு 100 Won" என்ற பெயரில் பிறரன்பு முயற்சி ஒன்றைத் துவங்கியது.
தென்கொரிய கத்தோலிக்க இல்லங்களில் ஒருவர் உண்ணும்போது, வறியோர் உணவுக்கென 100 Won, அதாவது, 5 ரூபாய் மதிப்புள்ள தொகையை ஒதுக்கி வைத்து, அந்தத் தொகையை பங்கு அருள் பணியாளரிடம் அளிப்பது என்பதே இந்தத் திட்டம்.
கடந்த 6 ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இந்த முயற்சியால், தென் கொரியா, மங்கோலியா ஆகிய நாடுகளில் உள்ள வறியோர் உண்பதற்கும், ஏழை மாணவர்களின் கல்வி செலவுகளுக்கும் உதவித் தொகைகளை Daejeon மறைமாவட்டம் அளித்து வருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.