2014-03-11 14:29:31

வெனெசுவேலாவில் நீதியின்றி அமைதி இல்லை, தல ஆயர்


மார்ச்,11,2014. அமைதி குறித்த அனைத்து விடயங்களும் முதலில் இருதரப்பினரும் உரையாடல் நடத்த ஆவல் கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்று கூறினார் வெனெசுவேலா நாட்டு ஆயர் ஒருவர்.
தென் அமெரிக்க நாடான வெனெசுவேலாவின் தேசிய நிலைமை குறித்து இஞ்ஞாயிறன்று பீதெஸ் செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை அனுப்பிய அந்நாட்டின் Maracay ஆயர் இரபேல் ரமோன் அல்போன்சோ, வெனெசுவேலாவில் உண்மையிலேயே அமைதி ஏற்படவேண்டுமெனில் பல்வேறு கூறுகள் கவனத்தில் எடுக்கப்பட வேண்டுமெனக் கூறியுள்ளார்.
இருதரப்புகளும் தங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகளை ஏற்பதே அமைதியை அடைவதற்கான படிகளில் ஒன்று என்றும், அந்நாட்டில் அமைதி ஏற்படுவதற்கு நீதி நிச்சயம் காக்கப்பட வேண்டுமென்றும் கூறினார் ஆயர் ரமோன் அல்போன்சோ.
வெனெசுவேலாவில் ஏறக்குறைய ஒரு மாதமாக இடம்பெற்றுவரும் அரசுக்கு எதிரானப் போராட்டங்களில் 21 பேர் இறந்துள்ளனர். இதற்கிடையே, அந்நாட்டு அரசுத்தலைவர் அடுத்த புதனன்று 3வது பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளார்.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.