2014-03-11 14:30:06

பூட்டானுக்கு ரூ.850 கோடி இந்தியா உதவி


மார்ச்,11,2014. பூட்டானில் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக அந்நாட்டிற்கு 850 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
பூட்டானில் மிகப்பெரிய திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் அந்நாட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்தியா விரும்புகிறது.
பூட்டானில் 11வது ஐந்தாண்டுத் திட்டத்துக்கான, மேம்பாட்டுத் திட்டக் குழுக் கூட்டம் தலைநகர் திம்புவில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்தியத் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், 10வது ஐந்தாண்டுத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
அத்திட்டங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் இருந்ததாக அந்தக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 59 புதிய திட்டங்களுக்கும் அந்தக் கூட்டத்தில் மேம்பாட்டுக் குழு ஒப்புதல் அளித்தது.
இதற்காக பூட்டானுக்கு 850 கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக இத்திங்களன்று உறுதி அளித்துள்ளது இந்தியா.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.