2014-03-10 16:48:59

ஒரே பாலின நடவடிக்கையாளர்களுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் உகாண்டா சட்டத்திற்கு திருப்பீட அதிகாரி எதிர்ப்பு


மார்ச்,10,2014. ஒரே பாலின நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வாழ்நாள் முழுவதும் சிறையிலடைக்கப்படுவார்கள் என்ற உகாண்டா அரசின் புதிய சட்டம் குறித்து தன் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார் ஆப்ரிக்க கர்தினால் பீட்டர் டர்க்சன்.
ஒரே பாலின நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தண்டிக்கப்படவேண்டிய குற்றவாளிகளோ, ஆயுள்தண்டனை வழங்கப்படவேண்டியவர்களோ அல்ல என்றார் திருப்பீடத்தின் நீதி மற்றும் அமைதி அவையின் தலைவர் கர்தினால் டர்க்சன்.
ஒரே பாலின நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் உகாண்டா நாட்டு ஆயர்களும், ஒரே பாலின நடவடிக்கைகளுக்கு ஆயுள்தண்டனை வழங்கும் அரசின் புதிய சட்டத்திற்கு தங்கள் ஆதரவை வழங்க மறுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Catholic Herald








All the contents on this site are copyrighted ©.