2014-03-08 15:28:03

பெங்களூரு உயர்மறைமாவட்டத்தில் ஒப்புரவு ஆண்டு


மார்ச்,08,2014. பெங்களூரு மறைமாவட்டம் தொடங்கப்பட்டதன் 75ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள் மார்ச் 5, திருநீற்றுப் புதனன்று புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் பேராயர் பெர்னார்டு மொராஸ் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
பெங்களூரு மறைமாவட்டத்தின் 75ம் ஆண்டையொட்டி அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என்ற தலைப்பில் ஒப்புரவு ஆண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்புரவு ஆண்டு, 2015ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதிவரை சிறப்பிக்கப்படும்.
இவ்வாண்டைத் துவக்கி வைத்துப் பேசிய பெங்களூரு பேராயர் மொராஸ், நம்மிடையே புரிந்துகொள்ளாமை, ஒற்றுமையின்மை போன்றவற்றுக்குக் காரணிகளாக இருக்கும் பல்வேறு கூறுகளைக் களைந்து எல்லா நிலைகளிலும் உண்மையான நல்லிணக்கத்தையும், புரிந்துகொள்ளுதலையும், ஒற்றுமையையும் ஏற்படுத்துவதே ஒப்புரவு ஆண்டின் நோக்கம் என்று கூறினார்.
இந்த ஒப்புரவு ஆண்டை அர்த்தமுள்ள விதத்தில் கொண்டாடுமாறு அனைத்துப் பங்குகளுக்கும், பல்வேறு குழுக்களுக்கும் வேண்டுகோள்விடுத்துள்ளார் பேராயர் பெர்னார்டு மொராஸ்.
1940ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி திருத்தந்தை 12ம் பத்திநாதரால் பெங்களூரு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. இது 1953ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதியன்று உயர்மறைமாவட்டமாக உயர்த்தப்பட்டது.

ஆதாரம் : daijiworld







All the contents on this site are copyrighted ©.