2014-03-08 15:27:54

கிறிஸ்தவத் தம்பதியருக்கான சவால்கள், திருத்தந்தை பிரான்சிஸ்


மார்ச்,08,2014. ஒன்றுசேர்ந்து வாழ்வது, ஒருவரையொருவர் எப்பொழுதும் எப்படி அன்பு செய்ய வேண்டும் என்று அறிவது, இவ்வாறு செய்யும்போது அவர்களின் அன்பு வளர்கிறது ஆகியவை கிறிஸ்தவத் தம்பதியருக்கான சவால்கள் என்று, தனது டுவிட்டர் செய்தியில் இச்சனிக்கிழமையன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், இஞ்ஞாயிறு மாலை முதல் மார்ச் 14 வெள்ளி முடிய திருப்பீடத் தலைமையக அதிகாரிகள் அனைவரும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுடன் இணைந்து இவ்வாண்டு தியானத்தை மேற்கொள்கின்றனர்.
உரோம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் ஆஞ்செலொ தெ தொனாத்திஸ் அவர்கள் வழங்கும் இந்தத் தியானம், உரோம் நகரின் Ariccia எனும் இடத்தில் அமைந்துள்ள தெய்வீக ஆசிரியர் (House of the Divine Master) இல்லத்தில் நடைபெறுகிறது.
வத்திக்கான் அதிகாரிகள் தங்கள் பணியிடங்களைவிட்டுத் தனித்து, வேறொரு இடத்தில் ஆண்டு தியானத்தை மேற்கொள்ளவேண்டும் என்ற முடிவை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.