2014-03-06 16:04:41

அண்மித்துவரும் பொதுத் தேர்தல்களால் இந்தியாவில் சிறுபான்மை மதத்தவர், கூடுதலான வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர்


மார்ச்,06,2014. அண்மித்துவரும் பொதுத் தேர்தல்களையொட்டி இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள், கூடுதலான வன்முறைகளையும், அடக்கு முறைகளையும் சந்தித்து வருகின்றனர் என்று இந்தியாவின் அரசுசாரா அமைப்பு ஒன்று அறிக்கை விடுத்துள்ளது.
'உலகளவில் கிறிஸ்தவ ஒருங்கிணைப்பு' Christian Solidarity Worldwide (CSW) என்ற ஓர் அரசுசாரா அமைப்பு, "இந்தியா: தேர்தல் ஆண்டில் பிரிவினைச் சக்திகள்" என்ற தலைப்பில் Fides செய்திக்கு அனுப்பியுள்ள ஓர் அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இந்து அடிப்படைவாதக் குழுக்களால் இந்தியா முழுவதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டாலும், ஒடிஸ்ஸா, கர்நாடகா, இராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சிறுபான்மையினர் அதிகமான அடக்கு முறைகளுக்கு உள்ளாகின்றனர் என்று இவ்வறிக்கை கூறுகிறது.
ஐ.நா.அதிகாரி, Heiner Bielefeldt அவர்கள் அண்மையில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு, மத உரிமை குறித்து வெளியிட்ட கருத்துக்களையும் CSW அமைப்பினர் தங்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.