2014-03-05 16:07:28

கர்தினால் Angelo Bagnasco - உலகின் கண்கள் அனைத்தும், உக்ரைன் மற்றும் இரஷ்ய நாடுகள் மீது திரும்பியுள்ளன


மார்ச்,05,2014. உலகின் கண்கள் அனைத்தும், உக்ரைன் மற்றும் இரஷ்ய நாடுகள் மீது திரும்பியுள்ளன என்றும், உக்ரைன் மக்களை காவல் அன்னை மரியா காக்கவேண்டுமென்று மன்றாடுவோம் என்றும், இத்தாலிய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் Angelo Bagnasco அவர்கள் கூறினார்.
உக்ரைன் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்தோர் பலரைக் கொண்டுள்ள ஜெனோவா உயர்மறைமாவட்டத்தில் வாழ்வோரும், இத்தாலியின் அனைத்து மறைமாவட்டங்களில் வாழ்வோரும் உக்ரைன் நாட்டில் நடைபெறும் கவலை தரும் நிகழ்வுகளைக் கவனித்து வருகின்றனர் என்று ஜெனோவா பேராயர், கர்தினால் Bagnasco அவர்களின் அலுவலகத்திலிருந்து வெளியான செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
ஜெனோவாவில் உள்ள புனித ஸ்தேவான் பேராலயத்தில், மார்ச் 6, இவ்வியாழன் மாலை, 5 மணிக்கு, உக்ரைன் மக்களுக்காக சிறப்பு வழிபாடு ஒன்று நடைபெறும் என்றும் இவ்வலுவலகம் அறிவித்துள்ளது.
உக்ரைன் நலத்துறை வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையின்படி, அங்கு நிலவும் போராட்டத்தில் இதுவரை, 98 பேர் உயிரிழந்துள்ளனர், 220 பேர் படுகாயம் அடைந்துள்ளனர், மற்றும் 300 பேர் காணாமற் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.