2014-03-04 15:36:39

“பசுமைஇல்ல” உண்ணாநோன்பில் பங்குகொள்ளுமாறு மும்பை கத்தோலிக்கருக்கு கர்தினால் ஆஸ்வால்டு அழைப்பு


மார்ச்,04,2014. இப்புதனன்று தொடங்கும் தவக்காலத்தில் விசுவாசிகள் மத்தியில் ”கார்பன் உண்ணாநோன்பு” என்ற நடவடிக்கையை ஊக்குவித்துள்ளார் மும்பைப் பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
சுற்றுச்சூழல் மாசுக்கேட்டைக் குறைக்கும் கார்பன் உண்ணாநோன்பு நடவடிக்கையை மேற்கொள்ளவும், அதன்மூலம் சுற்றுச்சூழலைப் பாதுகாத்து, மக்கள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உலகை மாற்றவும் வேண்டுமென மும்பை கத்தோலிக்கரிடம் கேட்டுள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.
மார்ச் 5, இப்புதனன்று தொடங்கும் தவக்காலம் குறித்து ஆசிய செய்தி நிறுவனத்திடம் பேசிய கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ், கடவுளோடும், படைப்போடும், ஒருவர் ஒருவரோடும் கொண்டுள்ள உறவுகளை மீண்டும் கண்டுணருவதற்கு இத்தவக்காலம் விசுவாசிகளுக்கு ஒரு வாய்ப்பாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
படைப்பைப் பாதுகாக்க வேண்டுமென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்புக்குப் பதிலளிக்கும் விதமாக, தவக்காலத்தில் விசுவாசிகள் ”கார்பன் உண்ணாநோன்பு” என்ற நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு ஊக்குவித்துள்ளார் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.