2014-03-04 15:36:59

குண்டு வெடிப்பு நடக்கும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியாவுக்கு மூன்றாம் இடம்


மார்ச்,04,2014. உலக அளவில், குண்டு வெடிப்பு அதிகம் நிகழும் ஆபத்தான நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்தைப் பிடித்துள்ளதாக, தேசிய குண்டு வெடிப்பு புள்ளி விவர மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில், முதல் இடத்தில் ஈராக்கும், இரண்டாவது இடத்தில் பாகிஸ்தானும் உள்ளன. இந்தியா உட்பட இந்த மூன்று நாடுகளிலுமே ஒட்டு மொத்த குண்டு வெடிப்புகளில் 75 விழுக்காட்டு குண்டு வெடிப்புகள் நிகழ்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் 212 குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், இது ஆப்கானிஸ்தானோடு ஒப்பிடுகையில் (108 குண்டு வெடிப்புகள்) இரு மடங்கு ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
241 குண்டு வெடிப்புகள் நடந்த 2012ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2013ம் ஆண்டு குண்டு வெடிப்பு குறைந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 2004ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரை சராசரியாக 298 குண்டு வெடிப்புகளும், 1,337 உயிரிழப்புகளும் நடந்திருப்பதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

ஆதாரம் : NBDC








All the contents on this site are copyrighted ©.