2014-03-04 15:36:46

உக்ரைன் மக்களுக்குத் தொடர்ந்து ஆதரவு வழங்குவதற்குத் தலத்திருஅவை உறுதி


மார்ச்,04,2014. உக்ரைன் நாட்டின் Crimean தன்னாட்சிப் பகுதியை இரஷ்யா ஆக்ரமித்திருப்பதற்கு மத்தியில் உக்ரைனைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள படைவீரர்களுக்கு மேய்ப்புப்பணி முறையில் தனது தொடர்ந்த ஆதரவை வழங்கத் தயாரித்து வருகிறது உக்ரைன் கிரேக்க வழிபாட்டுமுறை கத்தோலிக்கத் திருஅவை.
Crimean தன்னாட்சித் தீபகற்பத்தில் இரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பதில் அளிப்பதற்கு அனைத்துலக சமுதாயம் தயாரித்து வரும்வேளை, மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள உக்ரைன் கிரேக்க கத்தோலிக்கத் திருஅவைத் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk, தங்களின் முன்னாள் சோவியத் யூனியனின் இராணுவத் தலையீடு குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் இராணுவத்தில் 10 இலட்சம் படைவீரர்கள்வரை பணிசெய்வதற்கு அழைக்கப்பட்டுள்ள இவ்வேளையில் கத்தோலிக்கத் திருஅவை படைவீரர்களுடன் போர்க்களத்தில் ஒன்றிணைந்து ஆதரவு வளங்கும் எனவும் பேராயரின் அறிக்கை கூறுகிறது.
மேலும், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு மாஸ்கோ முதுபெரும் தந்தையின் உதவியைக் கேட்டுள்ளார் உக்ரைன் ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர்.
ஏறக்குறைய 1,50,000 இரஷ்யப் படைகள் உக்ரைன் நாட்டின் Crimean தன்னாட்சிப் பகுதியை ஆக்ரமித்திருப்பதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.