2014-03-01 15:53:27

அமெரிக்க ஐக்கிய நாட்டில் சமய சுதந்திரம் காக்கப்பட அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு வேண்டுகோள்


மார்ச்,01,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் பாரக் ஒபாமா, மற்ற நாடுகளில் சமய சுதந்திரம் காக்கப்பட முயற்சிப்பது போன்று, அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் சமய சுதந்திரம் காக்கப்பட நடவடிக்கை எடுக்குமாறு ஒபாமாவை வலியுறுத்தியுள்ளனர் அந்நாட்டு கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள்.
இரு கத்தோலிக்கரும், இவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபையின் எட்டு தலைவர்களும் இணைந்து அரசுத்தலைவர் ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், வெளிநாடுகளில் சமய சுதந்திரத்தை ஊக்குவிக்க முயற்சிப்பதுபோன்று, உள்நாட்டில் அனைத்து அமெரிக்கரும் சமய சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு கவனம் செலுத்துமாறு கேட்டுள்ளனர்.
அமெரிக்க அரசின் உள்நாட்டுக் கொள்கைகள், அனைத்துக் குடிமக்களின் மத நம்பிக்கையை முழுவதும் பாதுகாப்பதுபோல் இல்லை எனவும், வெளிநாடுகளில் சமய சுதந்திரம் காக்கப்படுவதற்கு ஒபாமா அரசு மிகவும் வலிமையானதாகச் செயல்படுவதாகவும் கூறியுள்ளனர் அமெரிக்க கிறிஸ்தவத் தலைவர்கள்.

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.