2014-02-26 16:40:12

ஹெயிட்டி கத்தோலிக்கர்களை, உலகக் கத்தோலிக்க வரைப்படத்தில் தெளிவான ஓர் அங்கமாக மாற்றிய திருத்தந்தைக்கு நன்றி – புதியக் கர்தினால் Chibly Langlois


பிப்.26,2014. ஹெயிட்டி நாட்டில் வாழும் கத்தோலிக்கர்களை, அகில உலகக் கத்தோலிக்க வரைப்படத்தில் தெளிவாகத் தெரியும் ஓர் அங்கமாக மாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு ஹெயிட்டி நாட்டுக் கர்தினால் Chibly Langlois அவர்கள் நன்றி தெரிவித்தார்.
பிப்ரவரி 22ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய 19 கர்தினால்களில் வயதில் குறைந்தவர் என்று கருதப்படும் 55 வயது நிறைந்த கர்தினால் Langlois அவர்கள், தனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இப்பொறுப்பு, ஹெயிட்டி மக்களுக்குத் தரப்பட்டுள்ள ஓர் அங்கீகாரம் என்று எடுத்துரைத்தார்.
மேலும் புதிய கர்தினால்களில் ஒருவரான, ஐவரி கோஸ்ட் நாட்டின் பேராயர் Jean-Pierre Kutwa அவர்கள், தன் நாட்டில் அமைதியைக் கொணர்வதே தன் தலையாயப் பணி என்று குறிப்பிட்டார்.
2002ம் ஆண்டு முதல், இரு உள்நாட்டுப் போர்களைச் சந்தித்துள்ள ஐவரி கோஸ்ட் மக்கள், வன்முறை கலந்த மொழியைக் கைவிட்டு, அன்புப் பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கு தன் உழைப்பை அர்ப்பணம் செய்வதாக கர்தினால் Kutwa அவர்கள் கூறினார்.
ஆப்ரிக்காவின் ஐவரி கோஸ்ட் மற்றும் புர்கினா பாசோ ஆகிய இரு நாடுகளில் பணியாற்றும் பேராயர்கள் இருவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் கர்தினால்களாக உயர்த்தியிருப்பது சிறப்பிற்குரியது.

ஆதாரம் : Fides / CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.