2014-02-21 15:54:16

இந்தியாவில் பாதிப்பேர் வறுமையில் வாழ்கின்றனர், இந்தியத் திருஅவையின் அர்ப்பணம்


பிப்.21,2014. பள்ளிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் ஏழைகளுக்கு உதவும் வகையில், தனது பணிகளை மேம்படுத்துவதற்கு இந்திய கத்தோலிக்க சமுதாயம் திட்டமிட்டு வருவதாக இந்திய ஆயர் பேரவையின் நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்திய மக்களின் கலாச்சார நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், ஊழலுக்கு எதிராகப் போராடி உணவு பாதுகாப்பு மசோதாவை ஊக்குவிக்கவும் இந்த நீதி, அமைதி மற்றும் வளர்ச்சி ஆணையம் முயற்சித்து வருகின்றது.
இந்திய மக்கள் தொகையில் 56 விழுக்காட்டினர், அதாவது ஏறக்குறைய 68 கோடிப் பேர் தங்களின் அன்றாட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இயலாமல் உள்ளனர் என்று புதிய அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
இந்திய அரசால் நியமிக்கப்பட்ட "McKinsey Global Institute" என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், நலவாழ்வு, குடிநீர் போன்ற வசதிகள், குறைந்தது 40 விழுக்காட்டு மக்களுக்குக் கிடைக்கவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.