2014-02-20 16:02:44

சமயங்களின் முக்கியப் பங்களிப்பை உணரும்போதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனயர்களுக்கிடையே தீர்வுகள் காணப்படும்


பிப்.20,2014. புனித பூமியில் ஊறியிருக்கும் ஆன்மீகப் பரிமாணத்தைக் கருத்தில் கொள்ளாமல், இங்கு நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணமுடியாது என்று எருசலேம் இலத்தீன் வழிபாட்டு முறை முதுபெரும் தந்தை Fouad Twal அவர்கள் கூறினார்.
சமயங்களின் முக்கியப் பங்களிப்பை உணரும்போதுதான் இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாட்டவருக்குமிடையெ நிலவிவரும் போராட்டங்களுக்குத் தீர்வுகள் காணப்படும் என்று பேராயர் Fouad Twal அவர்கள் வெளியிட்ட கருத்தை Fides செய்தி இப்புதனன்று வெளியிட்டது.
இஸ்ரேல் பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்கிடையே மீண்டும் ஒப்புரவை உருவாக்க அமெரிக்க அரசின் வெளியுறவுத் துறை மேற்கொண்டுள்ள முயற்சியின் ஒரு பகுதியாக, பேராயர் Fouad Twal அவர்கள் தன் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
எந்த ஒரு நாட்டிலும் அமைதி ஆழப்படுவதற்கு அங்கு நிலவும் மத நம்பிக்கை முக்கியமான பங்காற்றவேண்டும் என்று கூறிய பேராயர் Fouad Twal அவர்கள், மேமாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனித பூமிக்கு வரும் நேரத்தில் இந்த அமைதியை நோக்கி இரு நாடுகளும் பயணிக்கவேண்டும் என்று தன் வேண்டுகோளை விடுத்தார்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.