2014-02-19 15:16:14

"வாழ்வுக்கென நாற்பது நாள் செபம்" - தென்கொரியத் தலத்திருஅவையின் தவக்கால முயற்சி


பிப்.19,2014. "வாழ்வுக்கென நாற்பது நாள் செபம்" என்ற முயற்சியை தென் கொரியத் தலத்திருஅவை திருநீற்றுப் புதன் அன்று துவங்கவிருப்பதாக அறிவித்துள்ளது.
1973ம் ஆண்டு தென் கொரிய அரசு உருவாக்கிய கருக்கலைப்பு சட்டத்தை தடைசெய்யும் கருத்துடன் மார்ச் 5ம் தேதி திருநீற்று புதனன்று அனைத்து கத்தோலிக்கக் கோவில்களிலும் நாற்பது நாள் செப முயற்சிகள் துவங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி, மார்ச் ஆகிய இரு மாதங்களில் கொரியத் தலத்திருஅவை வாழ்வை நிலைநாட்டும் பல செயல் திட்டங்களை மேற்கொண்டு வருவதாக Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
4 கோடியே 87 இலட்சம் மக்கள் தொகையைக் கொண்ட தென் கொரியாவில், ஒவ்வோர் ஆண்டும் 3,40,000 பெண்கள் கருக்கலைப்பு செய்துகொள்கின்றனர் என்ற விவரத்தை அரசு வெளியிட்டுள்ளது. இருப்பினும், அங்கு நடைபெறும் கருக்கலைப்புக்கள், ஏறத்தாழ 15 இலட்சம் என்று தலத் திருஅவை கூறிவருகிறது.

ஆதாரம் Fides








All the contents on this site are copyrighted ©.