2014-02-19 14:58:21

பிப்.20,2014. புனிதரும் மனிதரே. - 'வாய்விட்டுச் சிரிப்பது, புனிதராவதற்கான விரைவு வழி'


தென் இத்தாலியைச் சேர்ந்த பிரான்சிஸ் பசானி என்பவர் அடிக்கடிச் சொல்லும் வார்த்தை, 'வாய்விட்டுச் சிரிப்பது, புனிதராவதற்கான விரைவு வழி' என்பதாகும். அதையே தன் வாழ்விலும் கடைப்பிடித்த பசானி, எப்போதும் மகிழ்ச்சியுடனேயே இருந்தார். தன் 14ம் வயதிலேயே பிரான்சிஸ்கன் துறவு சபையில் இணைந்து 10 ஆண்டு படிப்பிற்குப்பின் குருவானார். குருமாணவர்களுக்கு ஆசிரியர், இல்லத்தலைவர், சபையின் மாநிலத்தலைவர், நவதுறவியர் தலைவர் என பல பதவிகளை வகித்தாலும், ஏழைகளைச்சென்று சந்தித்து அவர்களுக்கு உதவுவதையும் தன் சிறப்புப் பணியாகக் கொண்டிருந்தார். அனைவரையும் அரவணைத்துச் செல்வதில் வல்லவர். நல் ஆலோசனை வழங்குபராகவும் போதகராகவும் திகழ்ந்தார் பசானி. இவர் போதனைகளுக்குச் செவிமடுத்து மனந்திரும்பியோர் எண்ணற்றோர். இவர் உயிரிழந்தபோது, அந்த ஊரில் இருந்த சிறார்கள் அனைவரும் ஒன்றிணைந்து தெருவில் ஓடி 'புனிதர் இறந்துவிட்டார்' எனக் கூக்குரலிட்டதாக வரலாற்றில் பதிக்கப்பட்டுள்ளது. சிறு குழந்தைகளே இவரை புனிதராக அறிந்திருந்தனர். இன்று திருஅவையில் அடக்கத்தின், அன்பின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் புனித பிரான்சிஸ் பசானி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.