2014-02-15 14:47:21

தென் சூடானில் ஒட்டுமொத்த சமுதாயமும் பசியினால் வாடுகின்றது, தலத்திருஅவை


பிப்.15,2014. தென் சூடானில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருந்தாலும் தவிர்த்து, அந்நாட்டில் சண்டை தொடர்ந்து இடம்பெற்று வருவதாக ஆயர் ஒருவர் கூறினார்.
தென் சூடானில் தற்போது இடம்பெற்றுவரும் சண்டை, சூடானின் 21 வருட உள்நாட்டுச் சண்டையைவிட மோசமானதாக உள்ளது எனக் கூறிய Malakal மறைமாவட்ட ஆயர் Roko Taban Mousa, தனது மறைமாவட்டத்தில் பெருவாரியான மக்களுக்கு உடனடியாக உணவு தேவைப்படுகின்றது என்று கூறினார்.
Malakal மறைமாவட்டம் உள்ளடக்கிய பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே இடம்பெற்றுவரும் சண்டை குறித்து Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த ஆயர் Taban, அந்நாட்டுக்கு மனிதாபிமான உதவிகள், குறிப்பாக உணவு உதவிகள் உடனடியாக அனுப்பப்படவில்லையெனில் அந்நாடு கடும் பஞ்சத்தை எதிர்நோக்கும் என எச்சரித்துள்ளார்.
கடும் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள தனது மறைமாவட்டத்தில் குறைந்தது 30 ஆயிரம் வீடுகள் அழிக்கப்பட்டுள்ளன என்றும், ஏறக்குறைய ஒரு இலட்சம் மக்கள் கடும் உணவு நெருக்கடியை எதிர்கொள்கின்றனர் என்றும் கூறினார் ஆயர் Taban.

ஆதாரம் : Zenit







All the contents on this site are copyrighted ©.