2014-02-15 14:47:40

இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் 2 இலட்சம் மெட்ரிக் டன் உணவுத் தானியம் வீணடிக்கப்பட்டுள்ளது


பிப்.15,2014. இந்தியாவில் கடந்த 8 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் உணவுத் தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ், இந்திய உணவுக் கழகத்திடம் சமூக ஆர்வலர் ஒருவர் எழுப்பியிருந்த கேள்விக்குப் பதிலளித்த இந்திய உணவு கழகம், கடந்த 8 ஆண்டுகளில் ஒரு இலட்சத்து 95 ஆயிரம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வீணாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தது.
வீணான தானியங்களில் அரிசி முதலிடத்தில் உள்ளதாகவும் அதிகளவில் தானியங்களை வீணடித்த மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளது இந்திய உணவு கழகம்.
மேலும், இந்தியாவில் தினமும் இலட்சக்கணக்கான இந்தியர்கள் பசியோடு உறங்கச்செல்லும்வேளை, அந்நாட்டில் ஒவ்வோர் ஆண்டும் 44,000 கோடி ரூபாய் பெறுமான உணவுப்பொருள்கள் வீணடிக்கப்படுகின்றன என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : தினமணி







All the contents on this site are copyrighted ©.