2014-02-14 16:05:55

மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் அகற்றப்பட வேண்டும், பாங்குய் பேராயர்


பிப்.14,2014. வெறுப்பும் பழிவாங்கும் எண்ணமும் மிகுந்துள்ள மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் மக்களின் நரம்பு நாளங்கள்வரை காழ்ப்புணர்வு நுழைந்துள்ளது என்று கவலை தெரிவித்தார் அந்நாட்டு ஆயர் ஒருவர்.
Aid to the Church in Need பிறரன்பு நிறுவனத்துக்குப் பேட்டியளித்த Bangui பேராயர் Dieudonnè Nzapalainga, தான் அண்மையில் சென்ற ஒரு கிராமத்திலிருந்து முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் இனப்படுகொலை இடம்பெறக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் நிறுவனம் எச்சரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பேராயர் Nzapalainga, இனப்படுகொலையை ஆரம்பிப்பதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றனவோ என்ற அச்சத்தையும் வெளியிட்டார்.
இந்நாட்டின் தீயவனின் கரங்களைப் பிடித்துத் தள்ளுவதற்கு யாரும் இல்லையெனில், தீயவன் தனது இலக்கை அடைவான் என்றும் எச்சரித்த பேராயர், அந்நாட்டில் இரத்தம் சிந்துதல் எல்லா இடங்களிலும் இடம்பெறுகின்றது என்றும் தனது பேட்டியில் தெரிவித்தார்.

ஆதாரம் : ACN







All the contents on this site are copyrighted ©.