2014-02-12 16:42:02

வறியோர், செல்வந்தர் பிரிவுகளைத் தீர்ப்பதில் முயற்சிகள் தீவிரமாக வேண்டும் - உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர்


பிப்.12,2014. அமைதியையும், நீதியையும் நிலைநாட்ட, அனைத்து கிறிஸ்தவ அமைப்புக்களும் இணைந்து, மேற்கொண்டுள்ள முயற்சிகள் தொடர வேண்டும் என்று உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர், முனைவர் Olav Fykse Tveit அவர்கள் கூறினார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் Bossey எனும் நகரில் நடைபெற்றுவரும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் கூட்டமொன்றில் பேசிய முனைவர் Tveit அவர்கள், தென் கொரியாவின் Busan நகரில் நடைபெற்ற பொது அவையில் வெளியிடப்பட்ட முடிவுகளைச் செயலாற்ற இது சரியான தருணம் என்று கூறினார்.
அமைதியை நிலைநாட்ட அனைத்து கிறிஸ்தவ சபைகளும் இணைந்து வரமுடியும் என்ற நம்பிக்கையை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றுகள் வெளிப்படுத்துகின்றன என்பதை எடுத்துரைத்த முனைவர் Tveit அவர்கள், அனைத்துச் சபைகளும் இணைந்து நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் உலகப் பயணத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
தென் சூடான், சிரியா ஆகிய நாடுகளில் நிலவும் துன்பங்களையும், வறியோர், செல்வந்தர் இவர்களுக்கிடையே உள்ள பிரிவுகளையும் தீர்ப்பதில் முயற்சிகள் தீவிரமாக வேண்டும் என்றும் உலகக் கிறிஸ்தவ சபைகளின் பொதுச்செயலர் Tveit அவர்கள் வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.