2014-02-12 16:41:00

"வயதில் முதிர்தலும், உடல் குறைபாடுகளும்" - உரோம் நகரில் கருத்தரங்கு


பிப்.12,2014. வாழ்வுக்கான திருப்பீடக் கழகம் "வயதில் முதிர்தலும், உடல் குறைபாடுகளும்" என்ற தலைப்பில் பிப்ரவரி 19, வருகிற புதன்கிழமை முதல் வருகிற சனிக்கிழமை முடிய உரோம் நகரில் கருத்தரங்கு ஒன்றை நடத்தவுள்ளது.
உரோம் நகரில் உள்ள Augustinianum நிறுவனத்தில் நடைபெறும் இக்கருத்தரங்கில், வயது முதிர்ச்சி, உடல் குறைபாடுகள் என்ற இரு கோணங்களிலும் உருவாகும் பிரச்சனைகள், சமுதாய, நன்னெறி ஆகிய அடிப்படைகளில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்கள், 1994ம் ஆண்டு உருவாக்கிய, வாழ்வுக்கான திருப்பீடக் கழகம், தன் 20ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது.
நலவாழ்வுப் பணியாளர்கள் திருப்பீட அவையின் தலைவர், பேராயர் Zygmunt Zimowski அவர்கள், இந்நிகழ்வின் நிறையமர்வுக் கூட்டத்தை, தலைமையேற்று நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.