2014-02-10 16:23:41

இலங்கையில் ஆண்டுக்கு 2000 புதிய தொழு நோயாளிகள்


பிப்.10,2014. 1000க்கும் மேற்பட்ட புதிய நோயாளிகள் ஆண்டுதோறும் பதிவாகும் 16 நாடுகளில் இலங்கையும் ஒன்று என உலக நலவாழ்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் ஆண்டுக்கு 2000 புதிய தொழு நோயாளிகள் பதிவாவதாக அந்நாட்டின் நல அமைச்சகமும் தெரிவித்துள்ளது.
2020ல் இந்த எண்ணிக்கையை, 1000ஆக குறைக்க அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாடெங்கிலும் பதிவான தொழு நோயாளர்களில், 177 பேர் சிறார்கள் என்று அரசு தொழு நோய் தடுப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் இயக்குநர் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ கூறினார்.
இலங்கையில் தொழுநோய் ஒழிக்கப்பட்டதாக 1995ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், தொழுநோய் இலங்கையில் பெரும் சுகாதாரப் பிரச்சனையாக இனிமேலும் இருக்கமுடியாது என்ற அர்த்தத்திலேயே 1995ம் ஆண்டு அறிவிப்பு வந்தது என்றும் தொழுநோயை முழுமையாக ஒழிப்பதில் சிரமங்கள் இருப்பதாகவும் டாக்டர் நிலந்தி பெர்ணான்டோ மேலும் கூறினார்.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.