2014-02-07 15:30:29

புதிய பேராலயத்துக்கு நிலம் வழங்கியிருப்பதற்கு Bahrain அரசருக்கு திருத்தந்தை நன்றி


பிப்.07,2014. Bahrain நாட்டில் கத்தோலிக்கப் பேராலயம் ஒன்றைக் கட்டுவதற்கு அந்நாட்டு அரசர் Hamad bin Isa Al Khalifa அவர்கள், நிலம் வழங்கியிருப்பதற்குத் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருப்பீடத் தூதர் பேராயர் Petar Radjic அவர்கள், கடந்த செவ்வாயன்று Bahrain அரசரை நேரில் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதிய நன்றிக் கடிதத்தை சமர்ப்பித்தார்.
அராபியத் தீபகற்பத்தின் பாதுகாவலராகிய அராபிய அன்னைமரியாவுக்கு புதிய பேராலயம் அர்ப்பணிக்கப்படவிருக்கின்றது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நன்றிக் கடிதத்தைப் பெற்ற Bahrain அரசர், உலகில் சகிப்புத்தன்மையும் நல்லிணக்கமும் வளருவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிவரும் ஊக்கத்துக்குத் தனது பாராட்டையும் தெரிவித்துள்ளார்.
அராபியத் தீபகற்பத்தில் கத்தோலிக்க ஆலயம் கட்டுவதற்கு அனுமதித்த முதல் நாடு Bahrain என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அனுமதி முதலில் 1939ம் ஆண்டில் வழங்கப்பட்டது.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.