2014-02-01 14:50:18

கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அருள்பணி வடக்கும்தாலா


பிப்.01,2014. கேரள மாநிலத்தின் கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, அருள்பணி அலெக்ஸ் ஜோசப் வடக்கும்தலா(Alex Joseph Vadakkumthala) அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
2011ம் ஆண்டிலிருந்து Verapoly உயர் மறைமாவட்டத்தின் முதன்மைக் குருவாகப் பணியாற்றி வந்த கண்ணூர் மறைமாவட்டத்தின் புதிய ஆயர் அலெக்ஸ் ஜோசப் வடக்கும்தலா, 1959ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி எர்ணாகுளம் மாவட்டத்தின் Maradu-Panangad என்ற ஊரில் பிறந்தவர்.
Verapoly உயர் மறைமாவட்டத்திற்கென 1984ம் ஆண்டில் குருவாக அருள்பொழிவு செய்யப்பட்ட புதிய ஆயர் வடக்கும்தலா, இந்திய திருஅவை சட்டக் கழகத்தின் தலைவராக 2009ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டுவரை பணியாற்றியுள்ளார்.
உரோம் உர்பான் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் திருஅவை சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், திருப்பீட நலவாழ்வு அவையிலும் பணியாற்றியுள்ளார்.
கண்ணூர் மறைமாவட்டத்தின் ஆயராகப் பணியாற்றிய ஆயர் Varghese Chakkalakal அவர்கள் கோழிக்கோடு மறைமாவட்டத்துக்கு மாற்றலாகிச் சென்ற பின்னர், 2012ம் ஆண்டு மே 15ம் தேதியிலிருந்து கண்ணூர் மறைமாவட்டம் ஆயரின்றிக் காலியாக இருந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.