2014-01-28 16:22:38

புதிய இனப் படுகொலைகளைத் தடுப்பதற்குத் தளர்வுறாமல் விழிப்புடன் செயல்பட ஐ.நா. அழைப்பு


சன.28,2014. இரண்டாம் உலகப் போரின்போது நாத்சிக் கொள்கைகளால் அழிக்கப்பட்ட அறுபது இலட்சம் யூதர்களுக்கு ஐக்கிய நாடுகள் நிறுவனமும் இத்திங்களன்று மரியாதை செலுத்தியது
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தில் கடைப்பிடிக்கப்பட்ட யூத இன அழிப்பு நினைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள், யூதமத விரோதப்போக்கின் ஆபத்துகளும், இவை போன்ற எவ்வித காழ்ப்புணர்வுச் செயல்களும் இனிமேல் உலகில் இடம்பெறாதிருக்கட்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
அதேவேளை, இத்தகைய கொடுஞ்செயல்கள் உலகில் நடவாதிருப்பதில் ஐ.நா. கவனமாகச் செயல்படும் எனவும் கூறிய பான் கி மூன் அவர்கள், கம்போடியா, ருவாண்டா, Srebrenica போன்ற இடங்களில், இனப் படுகொலைகளின் நச்சுத்தன்மை இன்றும் தொடர்கின்றன என்ற தனது கவலையையும் தெரிவித்தார்.
ஹங்கேரியிலிருந்து 5 இலட்சத்துக்கு மேற்பட்ட யூதர்கள், ஜெர்மனியின் நாத்சி வதைப்போர் முகாம்களுக்குக் கொண்டு செல்லப்பட்டதன் 70ம் ஆண்டின் நினைவாக இத்திங்களன்று ஐ.நா.வில் பல நினைவுப் பொருள்கள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

ஆதாரம்:UN








All the contents on this site are copyrighted ©.