2014-01-28 16:25:11

எலிகளிலிருந்து பரவும் ப்ளேக் எதிர்காலத்தில் மீண்டும் தோன்றலாம்


சன.28,2014. பழங்காலத்தில் இருந்த ‘ப்ளேக்’ எனப்படும் ஒரு வகையான கொள்ளை நோயைப் போலவே கொடூரமான ஒரு கொள்ளை நோய், எலிகள் போன்ற உயிரினங்களிடமிருந்து உருவாகும் ஆபத்து இருப்பதாக அமெரிக்க அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஆறாம் நூற்றாண்டிலும், 14ம் நூற்றாண்டிலும் பல இலட்சக்கணக்கான உயிரிழப்புகளுக்குக் காரணமான ‘பிளேக்’ எனப்படும் கொள்ளை நோய்க்கு, எலிகள் போன்ற உயிரினங்களிடமிருந்து உருவாகிய கிருமியேக் காரணம் எனக்கூறும் ஆராய்ச்சியாளர்கள், இத்தகைய நோய் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பினும், அந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதை நவீன சிகிச்சைகள் தவிர்க்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளனர்.
பிளேக்’ எனப்படும் கொள்ளை நோயினால் ஆறாம் நூற்றாண்டில் 3 கோடிக்கும் அதிகமான மக்களும், 14ம் நூற்றாண்டில் 5 கோடிக்கும் அதிகமான மக்களும் உயிரிழந்துள்ளனர்.

ஆதாரம்: BBC








All the contents on this site are copyrighted ©.