2014-01-27 13:33:44

புனிதரும் மனிதரே : தந்தை சொல் தட்டாத தனயன்



இந்தப் பத்துப் புதிய கட்டளைகளைத் தனது தந்தையிடமிருந்து பெற்றவர் புனித எமெரிக். இவர் ஹங்கேரி நாட்டு அரசர் முதலாம் ஸ்டீபனின் ஒரே மகன். இந்த அரசருக்குப் பிறந்த மற்ற குழந்தைகளெல்லாம் இறந்துவிட்டனர். ஆனால் கடைசியில் பிறந்த எமெரிக் மட்டுமே உயிர் பிழைத்தார். அக்கால உரோமைப் பேரரசின் பேரரசர் பெரிய கோன்ராட் (1027-1039), ஒரு சமயம் Bamberg மறைமாவட்டத்தின் நிதித் துறையை வன்முறையாக அபகரிக்கத் திட்டமிட்டார். அந்த நிதியிலிருந்து கிடைக்கும் வட்டியை இளவரசர் எமெரிக்குக்கு(Emeric) வழங்குமாறு பரிந்துரைத்தார் பேரரசர் கோன்ராட். ஆனால் எமெரிக்கின் தந்தையான அரசர் முதலாம் ஸ்டீபன் இதை அனுமதிக்கவில்லை. அதோடு அவர் தனது மகனுக்குப் பத்துக் கட்டளைகளையும் கொடுத்தார். தந்தையின் சொல்லைத் தட்டாமல் வாழ்ந்த இளவரசர் எமெரிக்கிடம் சில பொறுப்புக்களை ஒப்படைக்க விரும்பினார் அரசர் ஸ்டீபன். ஆயினும் எமெரிக் தியானயோக செப வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். அரசவை காரணத்துக்காகத் திருமணத்துக்கு ஒப்புதல் தெரிவித்து திருமணமும் செய்துகொண்டார் எமெரிக். இளவரசர் எமெரிக் வேட்டைக்குச் சென்ற சமயம் தனது 24வது வயதில், 1031ம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி கொடிய காட்டு ஆண்பன்றியினால் கொல்லப்பட்டார். இளவரசர் எமெரிக்கும், அவரது தந்தை அரசர் முதலாம் ஸ்டீபனும் ஒரே திருவழிபாட்டில் 1083ம் ஆண்டில் புனிதர்களாக அறிவிக்கப்பட்டனர். புனித எமெரிக் இளையோருக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.