2014-01-25 15:56:30

கொலம்பியாவில் அமைதிக்கு நம்பிக்கை,அரசுத்தலைவர் சாந்தோஸ்


சன.25,2014. கொலம்பியாவில் 50 ஆண்டுகளாக நடந்துவரும் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை இந்த 2014ம் ஆண்டில் கையெழுத்திடப்படும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார் அந்நாட்டு அரசுத்தலைவர் ஹூவான் மானுவேல் சாந்தோஸ்.
கொலம்பியாவில் Farc புரட்சிக் குழுவுக்கும், அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை 2012ம் ஆண்டு நவம்பர் முதல் கியூபத் தலைநகர் ஹவானாவில் இடம்பெற்று வருகிறது. இருப்பினும் புரட்சியாளர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக தாவோசில் பத்திரிகையாளரிடம் கூறினார் அரசுத்தலைவர் சாந்தோஸ்.
கொலம்பியாவில் 1960களிலிருந்து இடம்பெற்றுவரும் மோதல்களில் 2,20,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இச்சண்டை, இலத்தீன் அமெரிக்காவில் நீண்ட காலமாக நடந்துவரும் சண்டையாகும்.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.