2014-01-22 16:19:52

எகிப்தின் புதிய சட்டங்கள் அந்நாட்டு மக்களின் பெருமளவு ஆதரவு பெற்றதற்கு கத்தோலிக்க ஆயர்கள் மகிழ்வு


சன.22,2014. எகிப்தில் வரையறுக்கப்பட்டுள்ள புதிய சட்டங்களுக்கு, அந்நாட்டு மக்களில் 98 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்திருப்பது நம்பிக்கை தரும் ஓர் அடையாளம் என்று காப்டிக் வழிபாட்டு முறை கத்தோலிக்க ஆயர்கள் கூறியுள்ளனர்.
எகிப்து ஒளிநிறைந்த ஓர் எதிர்காலத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை, மக்களின் இந்த வாக்களிப்பு தெரிவிக்கிறது என்று Luxor ஆயர்கள் Antonios Aziz Mina அவர்களும், Joannes Zakaria அவர்களும் Aid to the Church in Need என்ற அமைப்பினருக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர்.
2012ம் ஆண்டு எகிப்தின் முன்னாள் தலைவர் Mohammed Morsi அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்ட சட்டத்திருத்தங்களை 64 விழுக்காட்டினரே ஆதரித்தனர் என்றும், தற்போதைய சட்டத்திருத்தங்களை 98 விழுக்காட்டினர் ஆதரித்துள்ளனர் என்றும் ஆயர்கள் சுட்டிக்காட்டினர்.
புதிய சட்டச் சீர்திருத்தங்கள் குழுவின் ஓர் உறுப்பினராக இருந்த ஆயர் Aziz Mina அவர்கள், புதிய சட்டங்களின் வழியாக, கிறிஸ்தவர்களின் வாழ்வும் உடமைகளும் பாதுக்காக்கப்படும் என்று கூறினார்.

ஆதாரம் : ICN / ACN








All the contents on this site are copyrighted ©.