2014-01-21 16:02:50

சுற்றுலாக்கள் எதிர்பார்த்ததைவிட 2013ம் ஆண்டில் அதிகம், ஐ.நா.


சன.21,2014. இந்த உலகம் பொருளாதாரச் சவால்களை எதிர்கொண்டுவந்தாலும், 2013ம் ஆண்டில் பன்னாட்டு அளவில் இடம்பெற்ற சுற்றுலாக்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்ததெனவும், 2012ம் ஆண்டைவிட 2013ம் ஆண்டில் மேலும் 5 கோடியே 20 இலட்சம் பேர் சுற்றுலா மேற்கொண்டனர் எனவும் ஐக்கிய நாடுகள் நிறுவனம் இத்திங்களன்று அறிவித்தது.
2013ம் ஆண்டில் பன்னாட்டு அளவில் இடம்பெற்ற சுற்றுலாக்கள் 5 விழுக்காடு அதிகரித்து, சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை நூறு கோடிக்குமேல் உயர்ந்துள்ளது என, ஐ.நா. உலக சுற்றுலா நிறுவனம் (UNWTO) கூறியது.
சுற்றுலாக்கள் பல நாடுகளின் பொருளாதாரத்துக்கு உதவியுள்ளன என்றும், ஆசியா, பசிபிக், ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் செல்கின்றனர் என்றும் உலக சுற்றுலா நிறுவனம் கூறியது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.