2014-01-21 16:01:48

கர்தினால் Wako : தென் சூடானில் அமைதிக்கு அழைப்பு


சன.21,2014. தென் சூடான் அரசியல் தலைவர்கள் தங்களின் சொந்த நலன்களைப் பின்னுக்குத் தள்ளி, அந்நாடு தற்போது எதிர்கொண்டுவரும் நெருக்கடிகளைக் களைவதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுள்ளார் Khartoum பேராயர் கர்தினால் Zubeir Wako.
சூடான் மற்றும் தென் சூடான் ஆயர்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு, தென் சூடான் தலைநகர் ஜூபா வந்துள்ள கர்தினால் Wako, நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள் என்றும், நாம் ஒருவர் ஒருவரைக் கொலை செய்யக்கூடாது என்றும் கூறினார்.
தென் சூடான் அரசுத்தலைவர் Salva Kiir ன் ஆதரவாளர்களுக்கும், அந்நாட்டின் முன்னாள் உதவி அரசுத்தலைவர் Riek Macharன் ஆதரவாளர்களுக்கும் இடையே இடம்பெறும் மோதல்களை நிறுத்துவதற்கு எத்தியோப்பியாவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.
அதேசமயம், தென் சூடானில் தொடர்ந்து நடந்துவரும் கடும் சண்டையில் ஐ.நா. நிவாரணப்பணி மையத்தில் தஞ்சம் தேடியிருக்கும் மக்களில் 34 பேர் காயமடைந்துள்ளனர் என ஊடகச் செய்தி ஒன்று கூறுகிறது.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.