2014-01-21 16:02:27

உலகின் செல்வத்தில் பாதி 85 பேரிடம் உள்ளது, ஆக்ஸ்ஃபாம்


சன.21,2014. உலகில் ஏழைகளுக்கும், செல்வந்தருக்குமிடையே சமத்துவமின்மை கட்டுப்பாடின்றி அதிகரித்துவரும்வேளை, உலகின் செல்வத்தில் பாதி 85 பேரிடம் உள்ளது என ஆக்ஸ்ஃபாம் பிறரன்பு நிறுவனத்தின் புதிய அறிக்கை ஒன்று கூறுகின்றது.
சுவிட்சர்லாந்து நாட்டின் தாவோசில் தொடங்கியுள்ள உலகப் பொருளாதார உச்சி மாநாட்டையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ஆக்ஸ்ஃபாம் பிறரன்பு நிறுவனம், உலகின் பணக்காரர்கள் தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களைக் கொண்டிருப்பது சனநாயகத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது எனவும் கூறியுள்ளது.
உலகில் ஏழைகளுக்கும், செல்வந்தருக்குமிடையே அதிகரித்துவரும் இடைவெளி 2014ம் ஆண்டில் உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை முன்வைக்கும் எனவும் இவ்வறிக்கை எச்சரிக்கிறது.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்த உலக உச்சி மாநாட்டுக்கு இச்செவ்வாய் மாலை ஒலி-ஒளிச் செய்தி வழங்குவது இம்மாநாட்டின் நிகழ்ச்சிக் குறிப்பில் உள்ளது.

ஆதாரம் : Al Jazeera








All the contents on this site are copyrighted ©.