2014-01-20 16:15:40

ஏறத்தாழ 1200 ஆண்டுகளுக்கு முன்னரே சீனாவில் கிறிஸ்தவம் இருந்துள்ளது


சன.20,2014. சீனாவில் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே கிறிஸ்தவம் பரவியிருந்ததற்கானச் சான்றுகள் அண்மை ஆய்வு ஒன்றின் மூலம் தெரிய வந்துள்ளது.
சிலுவை செதுக்கப்பட்ட கல் ஒன்றினால் மூடப்பட்ட பகுதியில் கண்டெடுக்கப்பட்ட எலும்புகளும் சாம்பலும், 1200 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த கிறிஸ்தவர்களின் கல்லறைப்பகுதியைச் சேர்ந்தவை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் ஹெனான் மத்திய மாநிலத்தைச்சேர்ந்த குகைகளில் இச்சிலுவை அடையாளமும் எலும்புகளும் 2009ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டபோதிலும் அதனைத்தொடர்ந்த ஆய்வு முடிவுகள் தற்போதே வெளியிடப்பட்டுள்ளன.
இதன் தொன்மை குறித்த சரியான கால அளவு அறிவிக்கப்படவில்லையெனினும், சீனாவில் கி.பி. 316க்கும், 907க்கும் இடைப்பட்ட காலத்தில் மிங்க் மற்றும் டாங்க் அரசப் பரம்பரையின் காலத்தைச் சார்ந்தவை இவை என்பது தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தாவோயிசம் மற்றும் புத்தமதம் குறித்த பல்வேறு தொன்மையான ஆதாரங்கள் கிட்டியுள்ளபோதிலும், கிறிஸ்தவம் ஏறத்தாழ 1,200 ஆண்டுகளுக்கு முன்னரே அந்நாட்டில் இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் கிட்டியுள்ளது தற்போதே முதன் முறையாகும்.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.