2014-01-15 16:00:42

புலம்பெயரும் மக்கள், புள்ளிவிவரங்கள் அல்ல, உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்கள் - Los Angeles பேராயர்


சன.15,2014. நாடுவிட்டு நாடு செல்லும் மக்களை, வெறும் புள்ளிவிவரங்களாகவும், எண்ணிக்கைகளாகவும் கருதாமல், அவர்கள் உடலும், ஆன்மாவும் கொண்ட மனிதர்கள் என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டும் என்று அமெரிக்காவின் ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் Los Angeles நகரில் அண்மையில் நடைபெற்ற தேசிய புலம்பெயர்ந்தோர் வாரத்தின் ஓர் அமர்வில் உரையாற்றிய Los Angeles பேராயர் Jose Gomez அவர்கள் இவ்வாறு கூறினார்.
இதற்கிடையே, சிரியா நாட்டில் தொடர்ந்து வரும் உள்நாட்டுப் போரினால் இல்லங்களையும், வாழ்வாதாரங்களையும் இழந்துள்ள இலட்சக்கணக்கான மக்களில் ஒரு சிலருக்காகிலும் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் தரவேண்டும் என்று பிரித்தானிய ஆயர் ஒருவர் கூறியுள்ளார்.
சனவரி 19, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கபடவிருக்கும் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் அகில உலக நாளையொட்டி, பிரித்தானிய ஆயர் பேரவையின் புலம்பெயர்ந்தோர் பணிக்குழுவின் தலைவர் ஆயர் Patrick Lynch அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

ஆதாரம் : Fides / ICN








All the contents on this site are copyrighted ©.