2014-01-15 16:00:17

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், Haiti நாட்டை அனைவரின் கவனத்திற்கும் கொணர்ந்துள்ளார் - ஆயர் Chibly Langlois


சன.15,2014. கர்தினால்களில் ஒருவராகத் தன்னை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்தெடுத்ததால், Haiti நாட்டை அனைவரின் கவனத்திற்கும் கொணர்ந்துள்ளார் என்று Haiti ஆயர்கள் பேரவைத் தலைவரான ஆயர் Chibly Langlois அவர்கள் கூறினார்.
65 வயது நிறைந்த ஆயர் Langlois அவர்கள், 2010ம் ஆண்டு Haiti நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது அரும்பணியாற்றிவர் என்றும், அதனைத் தொடர்ந்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைத்தவர் என்றும் CNA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தேர்ந்து, அறிவித்துள்ள 19 கர்தினால்களில், 18 பேர் தற்போது பேராயர்களாகவும், முன்னாள் பேராயர்களாகவும் பணியாற்றிவர்கள் என்பதும், ஆயர் Langlois ஒருவர் மட்டுமே ஆயராக உள்ள நிலையில் இந்தப் பொறுப்பிற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயர் Langlois அவர்களே, Haiti நாட்டில், முதன் முறையாக கர்தினால் பொறுப்பை ஏற்கும் ஆயர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : CNA/EWTN








All the contents on this site are copyrighted ©.