2014-01-11 15:38:58

வியட்னாமில் இயேசு சபையினரின் 400ம் ஆண்டுக் கொண்டாட்டம்


சன.11,2014. வியட்னாமில் இயேசு சபை மறைபோதகர்கள் முதன் முதலில் காலடி பதித்ததன் 400ம் ஆண்டைக் கொண்டாடும் நோக்கத்தில் இம்மாதம் 18ம் தேதியன்று வியட்னாம் இயேசு சபையினர் புனித ஜூபிலி ஆண்டை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளனர்.
ஜப்பானில் தொடர்ந்து அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஜப்பான் கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகள் குழுவுடன் 1615ம் ஆண்டு சனவரி 18ம் தேதியன்று இயேசு சபை அருள்பணியாளர்களின் முதல் குழு வியட்னாமின் Hoi An துறைமுகத்துக்குக் கப்பலில் வந்திறங்கியது.
ஆசிய நாடாகிய வியட்னாமில் மற்றவர்களால் ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்டிருந்தாலும், இயேசு சபை மறைபோதகர்களின் வருகை வியட்னாம் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக நோக்கப்படுகின்றது.
8 கோடியே 70 இலட்சம் மக்களைக்கொண்ட வியட்னாமில் 48 விழுக்காட்டினர் புத்த மதத்தினர். 7 விழுக்காட்டுக்கு மேற்பட்டவர் கத்தோலிக்கர். 20 விழுக்காட்டினர் மத நம்பிக்கையற்றவர்கள்.
இந்த ஜூபிலி ஆண்டு 2015ம் ஆண்டு சனவரி 18ம் தேதியன்று நிறைவடையும்.

ஆதாரம் : AsiaNews







All the contents on this site are copyrighted ©.