2014-01-11 15:38:30

மெல்பெர்ன் சீரோ-மலபார் புதிய மறைமாவட்டம், முதல் ஆயர் Bosco Puthur


சன.11,2014. ஆஸ்திரேலியாவில், மெல்பெர்ன் சீரோ-மலபார் புதிய மறைமாவட்டத்தை உருவாக்கி அதன் முதல் ஆயராக, ஆயர் Bosco Puthur அவர்களை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
திருத்தூதர் புனித தோமையார் மெல்பெர்ன் சீரோ-மலபார் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் Bosco Puthur, 1946ம் ஆண்டு திருச்சூரில் பிறந்தவர். குருத்துவக்கல்லூரிகளில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ள இவர், 2010ம் ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
ஆயர் Bosco Puthur அவர்கள், நியுசிலாந்திலுள்ள சீரோ-மலபார் வழிபாட்டுமுறை விசுவாசிகளுக்கும் பொறுப்பு வகிப்பார்.
மேலும், திருச்சூர் துணை ஆயராகப் பணியாற்றும் ஆயர் Raphael Thattil அவர்கள், இந்தியாவில் சீரோ-மலபார் மறைமாவட்டங்களைத் தவிர வேறு இடங்களில் வாழும் அவ்வழிபாட்டுமுறை விசுவாசிகளைச் சந்தித்து அவர்களின் மேய்ப்புப்பணிகளை ஆற்றுவதற்கென இச்சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.