கப்புச்சின் அருள் பணியாளர் Jacob Kani அவர்களுக்கு, பத்திரிக்கை இயலுக்கான 2013ம் ஆண்டின்
Honesty விருது
சன.10,2014. 25 வருட வரலாறு கொண்ட Indian Currents என்ற வார இதழின் முதன்மை ஆசிரியராகப்
பணியாற்றும் கப்புச்சின் அருள் பணியாளர் Jacob Kani அவர்களுக்கு, பத்திரிக்கை இயலுக்கான
2013ம் ஆண்டின் Honesty விருது வழங்கப்பட்டுள்ளது. அருள் பணி Kani அவர்கள், இந்த வார
இதழின் ஆசிரியராக, பல ஆண்டுகள், நேர்மை, அச்சமின்மை, மற்றும் துணிச்சலுடன் பணியாற்றிவருவதைப்
பாராட்டும் வகையில் இவ்விருது வழங்கப்பட்டுள்ளதாக UCAN செய்தி நிறுவனம் அறிவித்தது. பத்திரிகை
இயல் நேர்மை என்ற விருது 2013ம் ஆண்டில், முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ளது. கோவாவிலுள்ள
Honesty நிறுவனம் இவ்விருதை வழங்குகிறது.