2014-01-09 15:56:05

அமெரிக்காவில் மிதமிஞ்சிய பனி மற்றும் குளிருக்கான காரணம் அறிவதில் ஐரோப்பிய அறிவியலாளர்கள்


சன.09,2014. அமெரிக்காவில் இதுவரை இல்லாத அளவுக்கு பனி மற்றும் குளிர் நடுக்கத்திற்கான காரணம் என்ன என்ற ஐரோப்பிய அறிவியலாளர்கள் ஆராய்ந்து வருகின்றனர்.
அமெரிக்காவில் சிகாகோ உட்பட பல நகரங்கள் பனியில் உறைந்துவிட்டன. வெப்பநிலை பூஜ்யத்திற்குக் கீழ் 51 டிகிரிக்கு போய்விட்டது. இதனால் விமான சேவை அடியோடு பாதிக்கப்பட்டது. பல இடங்களிலும் நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டன.
இந்நிலையில் ஐரோப்பிய அறிவியலாளர்கள் குழு இது தொடர்பாக ஆராய்ச்சி நடத்தி வருகிறது. இக்குழுவின் ஆய்வு அறிக்கையின்படி, வட துருவப் பகுதிகள் முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு வெப்பம் கொண்டதாக உள்ளன. உலக வெப்பமயமாதலின் விளைவு தான் இது. இதை ‘போலார் வொர்டெக்ஸ்’ ‘Polar Vortex’ என்று கூறுவர்.
வட துருவ பிரதேசங்கள் மற்றும் இடைப்பட்ட பிரதேசங்களில் நிலவும் வெப்ப வேறுபாடு தான் இப்படிப்பட்ட மாறான வானிலைக்கு காரணம் என்றும் இனி வரும் ஆண்டுகளில் அமெரிக்கா உட்பட்ட சில நாடுகளில் இந்த காலகட்டங்களில் கடுங்குளிர், பயங்கர பனிப்பொழிவு நீடிக்கும் ஆபத்து உண்டு எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

ஆதாரம் : BBC / TamilWin








All the contents on this site are copyrighted ©.