2014-01-08 15:31:20

திருத்தந்தை பிரான்சிஸ், அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் தேர்ந்துள்ள மிக முக்கியமான மனிதர்களில் ஒருவர்


சன.08,2014. 2013ம் ஆண்டின் மிக முக்கியமான மனிதர்கள் என அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் தேர்ந்துள்ள பத்து பேரில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயர் இடம் பெற்றுள்ளது.
டிசம்பர் மாதம் Hainan எனும் நகரில், அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் ஏற்பாடு செய்திருந்த 15வது ஆண்டு கூட்டத்தில் வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள ஏனைய மனிதர்கள் அனைவரும் ஈரான், எகிப்து, இரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்களாக உள்ளனர் என்றும், அண்மையில் காலமான தென் ஆப்ரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களும் இவர்களில் ஒருவர் என்றும் Fides செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
அகில உலகச் சீன செய்தி நிறுவனங்கள் வெளியிடும் இந்தப் பட்டியலில் இதுவரை எந்த ஒரு திருத்தந்தையும், வேறு மதத் தலைவர்களும் இடம்பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : Fides / Zenit








All the contents on this site are copyrighted ©.