2014-01-03 15:20:39

அவசரகால நெருக்கடிகள், உலகளாவிய மனிதாபிமான அமைப்புக்கு பலத்த சோதனைகளை முன்வைத்துள்ளன, ஐ.நா


சன.03,2014. இயற்கைப் பேரிடர்கள், இரத்தம் சிந்தும் வன்முறைத் தாக்குதல்கள் போன்றவற்றால் தங்கள் வீடுகளைவிட்டு கட்டாயமாக வெளியேறியுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு, உலக சமுதாயத்தின் உறுதியான ஆதரவு தேவைப்படுகின்றது என ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
2013ம் ஆண்டு, உலகளாவிய மனிதாபிமான அமைப்புக்கு பலத்த சோதனையாக இருந்தது எனவும், 2014ம் ஆண்டில் இதில் மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கை இல்லையெனவும் ஐ.நா. அவசரகால நிவாரணப் பணிகளின் ஒருங்கிணைப்பாளர் Valerie Amos கூறியுள்ளார்.
கடந்த 2013ம் ஆண்டு குறித்து நியுயார்க்கில் பத்திரிகையாளர்களிடம் பேசிய Valerie Amos, போரினால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள சிரியா, ஹையான் சூறாவளியால் கடுமையாய்ப் பாதிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளின் நிலைமைகளைச் சுட்டிக்காட்டினார்.
தென் சூடானில் இடம்பெற்ற வன்முறையில் சில வாரங்களுக்குள் 1,94,000 பேர் வீடுகளைவிட்டு வெளியேறினர் எனவும், இவர்களுக்கு ஐ.நா.வின் உடனடி உதவி தேவைப்பட்டது எனவும் கூறினார் Amos.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.