2014-01-02 15:49:25

உலகில் பட்டினியை முற்றிலும் அகற்ற திருத்தந்தை விடுத்துள்ள அழைப்பை நடைமுறைப்படுத்துவோம், அயர்லாந்து கர்தினால்


சன.02,2014. உலகிலிருந்து பட்டினியை முற்றிலும் அகற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள அழைப்பை முழுமனதோடு ஏற்று, இந்த இலக்கை 2025ம் ஆண்டுக்குள் நடைமுறைப்படுத்துவோம் என்று அயர்லாந்து கர்தினால் கூறியுள்ளார்.
2014ம் ஆண்டு துவக்கத்தில் புத்தாண்டு செய்தியை வெளியிட்டுள்ள அயர்லாந்து நாட்டின் தலைமை ஆயர், கர்தினால் Sean Brady அவர்கள், உலகிலிருந்து பட்டினியை அகற்றுவதில் மக்கள் தலைவர்கள் ஆர்வமாக ஈடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
"ஒரே மனித குடும்பம், அனைவருக்கும் உணவு" என்ற விருதுவாக்குடன் திருத்தந்தை அவர்கள் ஆரம்பித்துள்ள ஒரு முயற்சி 2025ம் ஆண்டுக்குள் முழுமையடைய அனைவரும் இணைந்து உழைக்கவேண்டும் என்று கர்தினால் Brady அவர்கள் கூறியுள்ளார்.
கிறிஸ்து பிறப்பு நாள் ஒரு சிறப்பு மிக்க வரலாற்று நிகழ்வு என்று குறிப்பிடும் கர்தினால் Brady அவர்கள், இந்தப் பிறப்பு, ஒரு விழாவாக முடிந்துபோகாமல், பசித்தோருக்கு உணவு படைக்கும் ஒரு தொடர் நிகழ்வாக மாறவேண்டும் என்று தன் செய்தியில் விண்ணப்பித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.