2013-12-30 15:07:23

அமெரிக்க மக்கள் கருத்துக் கணிப்பில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மிக உயர்ந்த இடம்


டிச.30,2013. அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்கர்களில் 88 விழுக்காட்டினர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருஅவையின் தலைவராகச் செயல்படும் முறையைப் பாராட்டியுள்ளனர் என்று CNN ஊடகத்தின் கருத்துக் கணிப்பு ஒன்று அண்மையில் தெரிவித்துள்ளது.
இணையத்தளம், முகநூல் என்ற இரு சமூக வலைத்தளங்களில் மிக அதிகமாகப் பேசப்படும் ஒரு தலைவராக விளங்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, Times வார இதழ் 2013ம் ஆண்டின் தலைசிறந்த மனிதர் என்று அறிவித்துள்ளது, தகுதியானத் தேர்வு என்று CNN தன் கணிப்பில் கூறியுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வளர் இளம் பருவத்தினர் வாழ்ந்த சிறைக்குச் சென்று அவர்கள் காலடிகளைக் கழுவியதையும், தன் பிறந்தநாளன்று வீடற்றோருடன் காலை உணவைப் பகிர்ந்துகொண்டதையும், அருவருக்கத்தக்க முகத் தோற்றம் கொண்ட ஒருவரை அணைத்ததையும் மக்கள் பெருமளவில் பாராட்டியுள்ளனர் என்று இக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.
டிசம்பர் 16ம் தேதி முதல் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் 1035 பேர் கலந்துகொண்டனர் என்று CNN அறிவித்துள்ளது.

ஆதாரம் : CNN








All the contents on this site are copyrighted ©.