2013-12-27 16:23:01

எகிப்திய ஆயர் : புதிய அரசியல் அமைப்பு குறித்த கருத்து வாக்கெடுப்பு வன்முறையால் நிறுத்தப்படாது


டிச.27,2013. எகிப்து தலைநகர் கெய்ரோவில் இவ்வியாழனன்று இடம்பெற்ற வன்முறையும், அந்நாட்டில் இடம்பெற்றுள்ள பிற வன்முறைகளும், புதிய அரசியல் அமைப்பு குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்பை எவ்விதத்திலும் நிறுத்தாது என, காப்டிக் கத்தோலிக்க ஆயர் Antonios Aziz Mina கூறினார்.
இவ்வன்முறைகள் அந்நாட்டில் இடம்பெறவிருக்கும் புதிய அரசியல் அமைப்பு குறித்த பொதுமக்கள் கருத்து வாக்கெடுப்புக்கான உந்துதலை மேலும் அதிகரிக்கவே செய்கின்றன என, எகிப்தின் Giza ஆயர் Mina கூறினார்.
இஸ்லாம் தீவிரவாத அமைப்பான முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பின் ஆதரவுடன் அரசுத்தலைவராகப் பணியாற்றிய முகமது மோர்சி கடந்த ஜூலையில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பில் பதவி இழந்ததையடுத்து எகிப்தில் வன்முறைகள் தொடங்கின.
மேலும், முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு, ஒரு பயங்கரவாத அமைப்பு என்று எகிப்தின் இடைக்கால அரசு இப்புதனன்று அறிவித்ததைத் தொடர்ந்து வன்முறைகள் மேலும் அதிகரித்துள்ளன.
இவ்வன்முறைகளை வன்மையாய்க் கண்டித்துள்ள அதேவேளை, இவை நாட்டின் அப்பாவி மக்களை குறிவைத்து நடத்தப்படுகின்றன என்றும் குறை கூறியுள்ளார் ஆயர் Mina

ஆதாரம் : CNS








All the contents on this site are copyrighted ©.