2013-12-21 15:26:56

ஏழைப் பெண்களுக்கு கிறிஸ்தவம் உதவுகின்றது, அமெரிக்கப் பொருளாதார ஆய்வாளர்


டிச.21,2013. இந்தியாவில் வறுமையில் வாடும் பெண்கள் கிறிஸ்தவத்துக்கு மனம் மாறிய பின்னர் அவர்கள், பொருளாதாரச் சூழல்களில் முன்னேறுவதற்கு கிறிஸ்தவம் பெருமளவில் உதவி வருகின்றது என அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பொருளாதார ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார்.
வாஷிங்டன் ஜார்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தின் Berkley மையத்தைச் சேர்ந்த Rebecca Samuel Shah நடத்திய ஆய்வில், வறுமையில் வாடும் பெண்கள் கிறிஸ்தவத்துக்கு மனம் மாறிய பின்னர், விசுவாசக் குழுவில் உயிர்த்துடிப்புள்ள உறுப்பினராக உணருவதாகவும், அதிகமாக வேலை செய்து அதிகமாகப் பொருள்களை ஈட்டுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
“கிறிஸ்தவமும் சுதந்திரமும்” என்ற தலைப்பில் இம்மாதத்தில் உரோமையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய Shah, பெங்களூருவில் தானும், தனது குழுவினரும் தலித் பெண்கள் மத்தியில் நடத்திய ஆய்வில் இவ்வாறு தெரியவந்ததாகக் கூறினார்.
Shah குழுவினர், பெங்களூருவில் தலித் பெண்கள் வாழும் சேரிகளில் மூன்றாண்டுகள் தங்கி இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.

ஆதாரம் : CNA







All the contents on this site are copyrighted ©.