2013-12-14 15:59:32

இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையைச் சந்திக்கவுள்ளார் கர்தினால் Koch


டிச.14,2013. திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Kurt Koch அவர்கள், இச்சனிக்கிழமையன்று இரஷ்யாவுக்குத் தொடங்கியுள்ள சுற்றுப்பயணம், கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஒப்புரவை ஊக்குவிக்கும் பாதையில் முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்கோவிலும், செயின்ட் பீட்டர்ஸ்பெர்கிலும் ஐந்து நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கர்தினால் Koch, வருகிற புதனன்று இரஷ்ய வெளியுறவுத் துறை உதவித் தலைவரையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் சபைத் தலைவர் முதுபெரும் தந்தை Kirill அவர்களையும் சந்திக்கவுள்ளார்.
இச்சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுவதாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பிரதிநிதியாக, முதல்முறையாக, கர்தினால் Koch அவர்கள் முதுபெரும் தந்தை Kirill அவர்களைச் சந்திக்கவுள்ளார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவைத் தலைவர் கர்தினால் Koch அவர்களின் இரஷ்யாவுக்கான இச்சுற்றுப்பயணம் இம்மாதம் 19ம் தேதி நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.