2013-12-11 15:37:49

மேற்கு அன்டார்க்டிக் பகுதியில், 150 கன கிலோமீட்டர் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன


டிச.11,2013. மேற்கு அன்டார்க்டிக் பகுதியில் பனிப்பாறை உருகி கடலில் கலப்பது கடந்த மூன்று ஆண்டுகளாக மிக விரைவாக ஏற்பட்டு வரும் ஒரு மாற்றம் என்று அண்மைய ஆய்வு ஒன்று கூறுகிறது.
பூமியில், குறிப்பாக, அன்டார்க்டிக் துருவத்தில் உள்ள பனிப்பகுதிகளின் அளவைக் கணக்கிடுவதற்கு, 2010ம் ஆண்டு, Cryosat என்ற சிறப்பு செயற்கைக் கோள் ஐரோப்பிய நாடுகளால் விண்ணில் ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக் கோளின் கணிப்புப்படி, ஒவ்வோர் ஆண்டும், மேற்கு அன்டார்க்டிக் பகுதியில், 150 கன கிலோமீட்டர் அளவுக்கு பனிப்பாறைகள் உருகி கடலில் கலக்கின்றன என்று தெரிய வந்துள்ளது.
உலகெங்கும் உள்ள கடல்களின் மட்டம் 15 விழுக்காடு உயர்வதற்கு இந்தப் பனிப்பாறைகளின் சிதைவு காரணம் என்றும் இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : BBC








All the contents on this site are copyrighted ©.