2013-12-07 15:40:07

மதக் கலவரத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை: இந்திய அரசு அறிவிப்பு


டிச.07,2013. வகுப்புவாத வன்முறைத் தடுப்பு மசோதா நிறைவேறினால், மதக் கலவரங்களில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய அரசு, உருவாக்கியுள்ள வகுப்புவாத வன்முறைச் சட்ட மசோதாவுக்கான வரைவுகளில், மதக் கலவரத்தில் ஈடுபடுவோருக்கு, ஆயுள் தண்டனை விதிக்கப்படும் எனவும், மதக் கலவங்களைத் தூண்டும் வகையில் பிரச்சாரம் செய்வோருக்கு மூன்றாண்டு சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும் எனவும், இது தொடர்பான, வழக்கின் விசாரணையும், குற்றம் நடந்த மாநிலத்திலிருந்து, வேறு மாநிலத்துக்கு மாற்றப்படும் எனவும் கூறப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரஙகள் தெரிவித்தன.
உச்ச நீதிமன்றத்தில் இவ்வாரத்தில் இடம்பெற்ற ஒரு வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி, பி.சதாசிவம் தலைமையிலான "பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவில்,தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கும், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர்களுக்கும், முன்ஜாமின் கோரி, மனுத்தாக்கல் செய்யும் உரிமை இல்லை என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.